OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
மறவன்குடியிருப்பு கிராமம் என்பது, திரு.சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் அவர்களால் நிறுவப்பட்டதாகும். இந்த கிராமத்தில், இப்போது 5000 பேர்கள்களைக் கொண்ட சுமார் 2000 ரோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றனர்.
மறவன்குடியிருப்பு கிராமம், நாகர்கோயில் நகராட்சியின் நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது. நாகர்கோயில், இந்தியாவின் தென்கோடி முனையாம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமை இடமாகும்.
மறவன்குடியிருப்பு கிராம மக்கள் நாடார் சமுதாய இனத்தைச் சார்ந்த்வர்கள்.
மறவன்குடியிருப்பு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். தற்ப்போதைய, கோவில் புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு (Our Lady of Snow-Sancta Maria Thasnavis) அர்ப்பணம் செய்யபட்டது. இந்த கோவில் 1954-ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. மறவன்குடியிருப்பு பங்குத்தளம் 1984-ல் நிறுவப்பட்டது.
மறவன்குடியிருப்பு மக்கள், பாரம்பரிய பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
வருடாந்தர நிகழ்ச்சிகள்.
i) ஒவ்வொரு ஆண்டும் , ஆகஸ்ட் மாதம் ,5 ஆம் நாள் புனித தஸ்நேவிஸ் மாதா திருவிழா நடைபெறும்.
ii)ஒவ்வொரு ஆண்டும்,கிறிஸ்துமஸ் மற்றும் உயிர்ப்பு திருவிழா நள்ளிரவு திருப்பலி முடிந்தவுடன் ஊர் மக்கள் கோவிலிலிருந்து கல்லறைக்குச் சென்று மரித்து அடக்கம் செய்யப்பட்ட தங்கள் உறவினர்களூக்கு வணக்கமும், மரியாதையும் செலுத்தி அவர்களின் ஆத்மாவின் நித்திய இளைப்பாற்றிக்காக செபிப்பார்கள்.
iii)ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, தேவமாதா மீதுள்ள பக்தியைக் கொண்டாடும் வகையிலே அசனம் கடைப்பிடிக்கப்படுகிறது .அசனம் நடைபெறும் நாளில் கிராம மக்கள் அனைவரும் ஓன்று கூடி இறைவனுக்கு வெள்ளாடுகளைப் பலியிட்டுச் சோறு சமைத்து, தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்வார்கள்.
iv) ஆண்டு விழாக்கள், அனைத்து Grotto (குருசடி)களிலும் கொண்டாடப்படும் ;
நல்லமன மாதா கெபி
ஆரோக்கிய மாதா கெபி
புனித மிக்கேல் அதிதூதர் கெபி
புனித அமல உற்பவ மாதா கெபி
தினமும் திருப்பலி புதன்கிழமை தவிர | 6.00 AM |
English Mass | Sunday 5.30 PM |
Novena on Wednesday | 5.30 PM |
Novena with Eucharist Adoraton | First saturday of month at 6.00 PM |