OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
பாரம்பரிய படிப்பினைப்படி இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான புனித தோமையார் கிழக்கு திசையாம் இந்தியாவின் தென்மேற்குப் பகுதியான கொச்சியை வந்தடைந்தார். அவர் ஏழு கோவில்களை நிறுவினார். அவற்றில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு எனும் இடத்தில் உள்ளது. இது கோட்டாறிலிருந்து 15 கி.மீ. மேற்கில் இருக்கிறது. இங்கிருந்து கடைசியாக, அவர் மயிலாப்பூர் (சென்னை) வந்து சேர்ந்தார், இங்கு அவர், கிறித்துவ சமயம் மற்றும் அதன் பாரம்பரியத்தினை மயிலாப்பூர், மற்றும் அதன் அருகாமையிலுள்ள இடங்களில் பரப்பினார். அவர் கி.பி. 72யில், மயிலாப்பூரின் அருகில் உள்ள புனித தோமையார் மலையில் (St. Thomas Mount) வெட்டிக்கொல்லப்பட்டார். அன்னாரின் பூத உடல் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.