Maravankudieruppu Logo
Maravankudierupppu Church logo
Maravankudierupppu Church logo

OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

கோட்டார் மறைமாவட்ட பாதுகாவலர்


புனித பிரான்சீஸ் சவேரியார்

இவர், 1506-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார், 1537-ல் குருவாக அபிசேகம் பெற்றார். 1540-ல் போர்த்துகீசிய மன்னர் ஜான்-III, போப் ஆண்டவரிடம், சமயப்பரப்பாளர்களை தனது புதிய ஆட்சிப் பகுதியான இந்தியாவுக்கு அனுப்பும்படி வேண்டினார். அதன்படி புனித பிரான்சிஸ் சவேரியார் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, அவர் கோவாவில் 6-5-1542ல் வந்து இறங்கினார். பின்னர், 1542-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் அவர் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் வந்து சேர்ந்தார். புனித சவேரியார் கோட்டாறில் இருந்த போது, படகர்கள், வேநாடு மக்கள் மீது படையெடுத்தனர், இதை புனித சவேரியார் தனது ஜெபத்தால் அந்தப் போரில் ஜெயித்தார். மன்னன் இதனைப்பாராட்டியதோடு, அவருடன் நெருக்கமான உறவினையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். புனித சவேரியாரின் தொண்டுகளை கருத்தில் கொண்டு, மன்னன் நிலம் ஒதுக்கீடு செய்ததில் அவர் கோவில் ஒன்றைக்கட்டி அதனை, தேவமாதாவுக்கு அர்ப்பணித்தார். இந்த கோவில் இன்றும் கோட்டாறில் உள்ளது.

Home | History | Religious Profession | Parish | Gallery | Music | Blog | Genealogy | Conatct Us
 
© Copyright . MARAVANKUDIERUPPU. All rights reserved.