Maravankudieruppu Logo
Maravankudierupppu Church logo
Maravankudierupppu Church logo

OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

இந்தியாவின் முதல் கத்தோலிக்க மறை மாவட்டம்


கொல்லம் மறைமாவட்டம்

புனித தோமையார் கொல்லத்தில் வந்து மறைபரப்புப் பணி செய்தபோது இரண்டு பிஷப்புகளை அபிசேஷகம் செய்தார். இந்த இரண்டு ஆயர்களில் ஒருவர் கொல்லத்தில் நியமிக்கப்பட்டார். 1329-ஆம் ஆண்டு, போப்பாண்டவர் 22-ம் அருளப்பர் கொல்லம் எனும் இடத்தை, இந்தியாவிலேயே முதல் மறை மாவட்டமாக அமைத்து, 21-08-1329-ல் French Dominican Friar Jordanus Catalani of Severace என்பவரை, கொல்லத்தின் முதல் பிஷப்பாக நியமனம் செய்தார்.

26.05.1930-ல் கொல்லம் ஆயர், மேன்மைதங்கிய அலாய்சியூஸ் மரிய பென்சிகர் (Bishop Aloysius Maria Benziger) கொல்லம் மறைமாவட்டத்தைப் பிரித்து, கோட்டாறு மறைமாவட்டத்தை உருவாக்கினார். இதன் முதலாம் ஆயராக மேன்மை தங்கிய டாக்டர். லாரன்ஸ் பெரைரா நியமிக்கப்பட்டார்.

இவர் இந்தியாவிலிருந்து நியமிக்கப்பட்ட இந்திய ஆயர்களில் மூன்றாவது ஆயராவார். இவரை அடுத்து வந்த மேன்மைதங்கிய தாமஸ் ரோச் ஆஞ்ஞி சுவாமியவர்கள், வீராப்பொலி உயர் மறைமாவட்டத்திலிருந்து, கோட்டாறு மறைமாவட்டத்தைப் பிரித்து அதனை 11-10-1963-ல் மதுரை உயர்மறை மாவட்டத்தோடு இணைத்தார். 1971-ல் மேதகு மரியானுஸ் ஆரோக்கிய சாமியும், அவரைத் தொடர்ந்து 1989-ல் மேதகு லியோன் தர்மராஜ் அவர்களும் ஆயர்களாகச் செயல்பட்டனர். 2007-ஆம் ஆண்டு, மேதகு பீட்டர் ரெமிஜியஸ் அவர்கள் ஐந்தாவது ஆயராகவும், மேதகு நசரேன் சூசை தற்போது கோட்டாறு ஆயராக செயல்படுகிறார்.

Home | History | Religious Profession | Parish | Gallery | Music | Blog | Genealogy | Conatct Us
 
© Copyright . MARAVANKUDIERUPPU. All rights reserved.