OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
நமது பாரத நாட்டின் தொன்று தொட்ட குடிமக்களில் நாடார் வகுப்பினர்களும் ஒரு சாரார். பாரதம், பழைய காலத்தில் "அல்ஹின்ட்", என்று அராபியர்களால் அழைக்கப்பட்டது, பைபிள் தோன்றிய காலத்தில், அவர்கள், நான்கு ஆறுகளின் மக்கள் என்று அறியப்பட்டனர். ஆனால், அவர்கள் தோற்றம், தெற்குப்பகுதியாம் "குமரிக்கண்டம்" என்பதாகும்.
சேரநாடு, வில்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு அவர்கள் நாடார்கள் அல்லது சாணார்கள் என்று அறியப்பட்டனர். அவர்களது சின்னம், பனைமரத்தின் பூ விக்ரம சோழ உலாவில், ஒட்டக்கூத்தன் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை என்பவரை வில்லவன் அல்லது நாடார், என்ற குறிப்பிடுகின்றார்.
துரதிர்ஷ்டவசமாக பண்டைத்தமிழர்களின் வரலாறு, வரலாற்றுக்கால நாடார்களை, அன்னார் தம் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, திருத்தி, புனைந்து, படை எடுத்து வந்த ஆரியர்களின் பெயருக்குப்புகழ் சேர்த்திட, ஏற்படுத்திவிட்டது. இத்தகைய மாற்றங்கள், பெரும்பகுதியும், முகலாய படையெடுப்பிற்கும் பின்னர், ஆரியப் பார்ப்பனர்களின் துணை கொண்டு செய்யப்பட்டவை ஆகும். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, ஆதியில் நாட்டை ஆட்சி செய்து வந்த வகுப்பினரை- நாடார்களை அவர்தம் பெயர்க்கு இருந்த பெருமையைக் குறி வைத்து அழித்து, ஒழித்து விட்டனர்.
12-ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இங்கே வாழ்ந்த நாடார்கள் தங்களின் இந்துக் கோயில்களுக்கு இருந்த மிகப்பெரும் சொத்துக்கள் அனைத்தும். பார்ப்பனர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டுவிட்டன. நாடார்களின் வீழ்ச்சி தொடங்கியது. பாரத பூமியில் முழுவதும் பன்மொழிப் புரட்சிகள் ஏற்பட்ட போது, தமிழ் நேர்மையற்ற முறையில் பின்னடைவுக் கொணரப்பட்டு, சமஸ்கிருதம், வலுவான இடத்தைப் பெற்றுவிட்டது. இவ்வாறாக, தஞ்சாவூர் - தமிழ் நாடார்களின் முக்கியப்பகுதியின் புகழ் மங்கச் செய்யப்பட்டுள்ளது. வலங்கைமாலை, நாடார்களின் ஓலைச்சுவடிகள் ஒன்று. அவர்களது வரலாற்றினைப் பேசுகிறது.
15-ஆம் நூற்றாண்டு வாக்கில் நாடார்கள், நாயக்கர்களால், வலிமை குறைக்கப்பட்டனர். ஏனெனில், நாடார்களிடையே உட்பூசல்களும் ஒற்றுமையின்மையும் மேலோங்கி இருந்தன. 1664-ஆம் ஆண்டு, நாடார்கள் அவர்தம் கோயில்களினின்றும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். நாடார்களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமைகளால், 13 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், கிறித்துவ சமய ஞானிகள், நாடார் ஆதித்தம் செலுத்திய பகுதிகளில், சிறந்த மதமாற்றம் செய்வதற்கு தகுதியான இடமாகக் கண்டனர். இந்த கிறிஸ்தவ ஞானிகள் இல்லா திருப்பின், நாடார் இனம் முற்றிலுமே, ஆரிய ஏஜென்டுகளின் திட்டப்படி அழிக்கப்பட்டிருக்கும்.
சமஸ்கிருத அகராதி நாடார்களை, அரச இனம் (Royal race) எனக்காட்டுகிறது. சமயப்பரப்புக் குழுக்களைச் சேர்ந்த ஞானிகள் நாடார்களுக்கு, பொருளாதார ரீதியில் உதவி அளித்து வாழ்வித்த போதிலும் அவை மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலுள்ள நாடார்களின் உயர்ந்த குணநலன்களையும், விலை மதிப்பில்லா "சாஸ்திரங்கள்". அவர்களிடம் இருந்ததைப்பற்றி எதுவுமே கூறவில்லை. குமரி மாவட்ட நாடார்களின் உயர்ந்த குணநலன்களையும். விலைமதிப்பில்லா சாஸ்திரங்கள் அவர்களிடம் இருந்ததைப்பற்றியும் எதுவுமே கூறவில்லை. குறிப்பாக, குமரி மாவட்ட நாடார்களின் அரிய ஆவணங்களாம், வர்ம சாஸ்திரம், காலரி வைத்யம், வானியல் மற்றும் தர்க்க சாஸ்திரம் போன்றவை ஆகும். இவற்றை, சமஸ்கிருத மொழியிலும் காண இயலாது, சிறப்பாக கன்னியாகுமரி வாழ் நாடார்களிடமுள்ள வர்மசாஸ்திரம் போன்றவற்றை வேறு எங்கிலும் காண முடியாது.
16 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளுக்கு, இடைப்பட்ட காலகட்டத்தில், நாடார்கள் ஆரிய முகவர்களால் திணிக்கப்பட்ட புதிய சாதிப் பாகுபாட்டின் கீழ் போராடி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக முன்னேற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்தக் கால கட்டங்களில் தான், மாபெரும் போராட்டங்களாம், "கோயில் நுழைவு இயக்கம்", "மேலாடை அணியும் போராட்டம்", "மனித உரிமை இயக்கம்", பல தலைவர்களால், குறிப்பாக சுவாமி தோப்பு அய்யா ஸ்ரீ வைகுண்டர் மற்றும் மார்ஷல் நேசமணி ஆகியோரால் நடத்தப்பட்டன.
திருவிதாங்கூரில், அக்கால கட்டத்தில், பெண்கள் தமது மார்புப்பகுதி மற்றும் முழங்கால் பகுதிகளை மூடிமறைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நாடார்களில் ஆண்கள் தலைப்பாகை கட்டவும், மேல் சாதி மக்களைப்போன்று உடை அணிந்து கொள்ளவும் மறுக்கப்பட்ட சட்டங்கள் இருந்தன. நாடார்கள் வேட்டி கட்டும் போது, முழங்காலுக்குக் கீழே வேட்டி அணிவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தப்பாகுபாட்டினைக் களைவதற்கு 19-ம் நூற்றாண்டில் சுவாமி தோப்பு அய்யா ஸ்ரீ வைகுண்டர் போராடி நாடார்களின் சுயமரியாதையினை நிலைநாட்டப் பாடுபட்டார். 20-ஆம் நூற்றாண்டின் மையகாலத்தில் குமரித்தந்தை திரு. மார்ஷல் A. நேசமணியும், இதற்கு அரும்பாடுபட்டார்.