Maravankudieruppu Logo
Maravankudierupppu Church logo
Maravankudierupppu Church logo

OUR LADY OF SNOWS - PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

புனித தஸ்நேவிஸ் மாதா


புனித தஸ்நேவிஸ் மாதா (OUR LADY OF SNOW)

போப் ஆண்டவர் லிபேரியுஸ் (கி.பி. 352-366) கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போது, ரோமன் பாட்ரீஷியன் ஜான் மற்றும் அவர்தம் மனைவி, வாரிசுகள் இன்றி இருந்தனர், அப்போது அவர்தம் உடைமைகள் அனைத்தையும் தேவமாதாவுக்கு கொடையளிப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள், தேவமாதாவை வணங்கி, அவர்க்கு, தங்களது சொத்துக்களை எவ்வாறு அளிப்பதென்பதை அவர்கட்கு தெரிவிக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டனர். கனவில் அவர்களிடம் மாதா எஸ்கலின் மலையில் ஒரு கோயிலைக்கட்டும்படி சொன்னார்கள். ஆகஸ்டு திங்கள் 5-ஆம் நாள் இரவு நேரத்தில் கோடைகாலமானதால் பனி பெய்ய முடியாத காலத்தில், அவர்கள் கனவு கண்டபடி எஸ்கலின் குன்றில் ஓரிடத்தில் மட்டும் பனிபெய்திருந்தது. இதற்கிணங்க, அவர்கள் அந்த இடத்திலேயே பெரிய கோவில் ஒன்றைக் கட்டி தேவமாதாவுக்கு மரியாதையும் வணக்கமும் செய்தனர். இந்த கோவில், ஆதியில் போப்பாண்டவர் லிபேரியஸ் என்பரால் கட்டப்பட்டது. எனவே, அவர்தம் பெயரால் "Basilica Liberii" அல்லது Liberiana என்று அழைக்கப்பட்டது

திருச்சபையில் சில பிரிவினர்கள், இந்த மேம்பாட்டினை விரும்பவில்லை, எனவே தேவமாதாவுக்கு முக்கியத்துவம் அளித்திடக் கூடாதென்ற வாதுரையினை அவர்கள் எழுப்பினர்.

கி.பி. 428-ஆம் ஆண்டு, புதிதாக நியமிக்கப்பட்ட கான்ஸ்டென்டி நோபிள் ஆயர் நெஸ்டோரியஸ் என்பவர், மரியாளை "Theotokos" அதாவது, "கடவுளின் தாய்" என்பதைச் சாடினார். மரியாள் 'Christokos' அதாவது கிறிஸ்துவின் தாயாராக இருந்திட்ட போதிலும் அவர் கடவுளின் தாயாராக இருந்திட இயலாது என்றும் பிரசங்கித்தார். பின்னர், குறுகிய காலத்திலே அலெக்ஸான்டிரியாவின் பிஷப், சிரில் என்பவர் நெஸ்டோரியஸுக்கு மேற்கூறப்பட்ட தவற்றினைக் களைந்திடுமாறு கடிதம் எழுதினார். அவரிடமிருந்து எதிர்மறையான பதிலே வந்தது. அந்த பதில் கடிதம் பெற்ற பிறகு, ஆயர் சிரில், போப் செலஸ்டின் என்பவருக்கு நெஸ்டோரியஸின் பதிலை அனுப்பி வைத்தார். சிரில், தனது கடிதத்தையும் மற்றும் நெஸ்டோரியஸின் பதிலையும் போப்பாண்டவரின் முடிவுக்கு அனுப்பி வைத்தார். ஆவணங்களை ஆய்ந்திட்ட பின்னர், போப்பாண்டவர் செலஸ்டின், நெஸ்டோரியஸுக்கும் அவர்தம் கற்பித்தலுக்கும் கண்டனம் தெரிவித்தார். மற்றும் அவர் கூற்றை 10 நாட்களுக்குள் திரும்பப் பெறுமாறு ஆணை பிறப்பித்தார். போப்பாண்டவர் மேற்சொன்ன திரும்பப் பெறலைப் பெற்றுக்கொள்ள அதிகாரமும் வழங்கினார். அவ்வாறில்லை என்றால், நெஸ்டோரியஸைக் கண்டித்துப் பதவி இறக்கம் செய்திடவும் கூறினார். நெஸ்டோரியஸ், திரும்பப் பெறலை (வாபஸ் வாங்குவதை) மறத்ததுடன், கடவுளின் தாய் (Theotokos) என்ற பெயர்க்கு எதிராகத தெளிவான கண்டனமும் வெளியிட்டார். "ஒரு தாயானவர், தன்னைவிட அதிக வயதுடைய மகனை ஈன்றெடுக்க இயலாது" என்றும், மரியாளை கடவுளின் தாயார் என்று அழைத்தால், அவர் பெண் கடவுளாக்கப்படுகிறார் என்று பதில் எழுதினார். நெஸ்டோரியஸ், ஆயர் சிரிலுக்குப் பணிய மறுத்தார். இந்தப் பிரச்சினையை விவாதிப்பதற்கு புனித சங்கம் ஒன்றைக் கூட்ட வேண்டுமென்று, ஆயர் சிரில், போப்பாண்டவர் செலஸ்டீனிடம் கோரிக்கை விடுத்தார். இதனால் போப்பாண்டவர் செலஸ்டின் புனித சங்கம் ஒன்றை எபேசு நகரில் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி கி.பி. 429-ஆம் ஆண்டு எபேசு நகரில் சங்கம் கூட்டப்பட்டு நெஸ்டோரியஸ் நேரில் ஆஜராக பணிக்கப்பட்டார். நெஸ்டோரியஸ் அதை மறுத்துவிட்டார். இரண்டு ஆண்டுகால ஆய்வுக்குப்பின் எபேசு சங்கம் நெஸ்டோரியஸ் மற்றும் அவர்தம் சீடர்களுக்குக் கண்டனம் தெரிவித்தது. எபேசு சங்கத்தின் தீர்ப்பாணை மற்றும் சொற்பொருள் விளக்கமும் போப்பாண்டவர் சிக்ஸ்துஸ் என்பவரால் 431ல் அங்கீகரிக்கப்பட்டது. ஏனெனில் போப்பாண்டவர் செலஸ்டின் ஏற்கனவே இறந்து விட்டார். மக்களுக்கு அஞ்சிய நெஸ்டோரியஸ் பெர்சிய நாட்டிற்கு ஓடி விட்டார்.

போப்பாண்டவர் சிக்ஸ்டஸ் III, 432ல் ரோமில் உள்ள எஸ்கலின் மலை மீதுள்ள "சாங்த்தோ மரியா மாஜ்ஜியோர்" (Sancta Maria Maggiore) அர்ப்பணிப்பை நினைவு கூர்ந்து கொண்டாட ஆகஸ்டு மாதம் 5ம் நாள் நிர்ணயம் செய்து, அதனை மரியாளுக்கு அதாவது Dedicatio Sanctae Mariae-க்கு அர்ப்பணம் செய்து, ரோமிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் பிரதான கோயில் என உத்தரவிட்டு, பின்னர் இந்தக்கோயில் உலக முழுமைக்குமுள்ள எல்லா மாதா கோவில்களுக்கும் பிரதான கோவில் என பிரகடனப்படுத்தப்பட்டது. 'Sancta Maria Maggiore' என்பது, உலகிலுள்ள எல்லா மாதா கோவில்களுக்கும் இதுவே மிகப்பிரதானமானது என்று பொருள்படும்.

"Thasnavis" என்பது போர்த்துகீசிய மொழியில் "பனிபெய்தல்" என்பதாகும்.
Sancta Maria Thasnavis அதாவது Sancta என்றால் புனிதமானது என்றும்
'Maria' என்பது மேரி என்றும்,
'Thasnavis' என்பது பனிபெய்தல் என்றும் அர்த்தமாகும்.

Maravankudieruppu Thusnavis Matha
Home | History | Religious Profession | Parish | Gallery | Music | Blog | Genealogy | Conatct Us
 
© Copyright . MARAVANKUDIERUPPU. All rights reserved.